ADDED : மார் 26, 2026 01:09 AM
ஈரோடு: மொடக்குறிச்சி தொகுதியில், 14 ஓட்டுச்சாவடிகள் பதட்டமா-னவை என கண்டறியப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் ஏப்.,23ல் நடக்கிறது. இதனையொட்டி, 8 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள 2,379 ஓட்டுச்சாவடிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக போலீசார் மட்டுமின்றி, துணை ராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில், 77 ஓட்டுச்-சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.மொடக்குறிச்சி தொகுதியில், 2 லட்சத்து, 6,122 வாக்காளர்க-ளுக்கு, 290 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 14 ஓட்டுச்சாவ-டிகள் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை சாவ-டிபாளையம் பதுார் பஞ். யூனியன் பள்ளியில் 3, அவல் பூந்-துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 3, வெள்ளோட்டம்பரப்பு பஞ்., யூனியன் தொடக்கப் பள்ளியில் 1, நஞ்சை ஊத்துக்குளி பஞ்., யூனியன் துவக்கப் பள்ளியில் 1, தாமரைபாளையம் பஞ்., யூனியன் துவக்கப் பள்ளியில். 2, கல்வெட்டுபாளையம் தனியார் பள்ளியில், 2, சாலைபுதுார் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளியில் 2 என மொத்தம், 14 ஓட்டுசாவடிகள், 7 இடங்களில் உள்ளன.
பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் போலீசார் மற்றும் மத்திய துணை ராணுவ வீரர்கள் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் வெப் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
