/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டறையில் தீ விபத்து 14 விசைத்தறிகள் நாசம்
/
பட்டறையில் தீ விபத்து 14 விசைத்தறிகள் நாசம்
ADDED : மார் 16, 2024 01:12 AM
ஈரோடு:ஈரோடு, ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயகுமார். சூரம்பட்டிவலசு சாஸ்திரி சாலையில், ஆட்டோலுாம் தறிப்பட்டறை வைத்துள்ளார். இங்கு, 14 விசைத்தறிகள் இயங்குகின்றன.
நேற்று முன்தினம் இரவு பணியில், 10 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு, 11:00 மணிக்கு பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். தீ அதிகமாகி துணி, நுால், விசைத்தறிகளுக்கு
பரவியது.
இதனால் தீயணைப்பு துறைக்கு தகவல் தந்தனர். விரைந்து சென்ற வீரர்கள், 2 மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், 14 விசைத்தறிகளும் தீயில் நாசமானது.
துணி, நுாலும் முழுமையாக சாம்பலானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். சூரம்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.

