ADDED : ஜூலை 14, 2026 05:57 AM

அ நிறம் | அளவு
சென்னிமலை; சென்னிமலை யூனியன் எக்கட்டாம்பாளையம் ஊராட்சி தட்டாரவலசை சேர்ந்தவர் குணசேகரன் 45; நல்லபாழி பகுதியில் பட்டி அமைத்து, 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக காட்டில் திறந்து விட்டிருந்தார்.அப்போது வந்த ஏழு வெறிநாய்கள், ஆடுகளை துரத்தித் துரத்தி கடித்தன. இதில், 10 ஆடுகள் பலி-யாகி விட்டன. நான்கு ஆடுகள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடின. கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தும் இந்த நான்கு ஆடுகளும் இறந்து விட்டன. 14 ஆடுகளுக்கும் அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
