ஈரோடை-, சுதா மருத்துவமனை இணைந்து துார்வாரப்படும் ஓடை
ஈரோடை-, சுதா மருத்துவமனை இணைந்து துார்வாரப்படும் ஓடை
ADDED : ஜூலை 14, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடை மற்றும் சுதா மருத்துவமனை இணைந்து, கீரிப்பள்ளம் ஓடை துார்வாரும் பணி தொடங்கியுள்ளது.
கோபி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் திடல் அருகே அமைந்துள்ள கீரிப்பள்ளம் ஓடையில், அடைப்புகள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றி துார்வாரும் தொடக்க விழா நடந்தது. ஈரோட்டை அமைப்பின் தலைவரும், சுதா மருத்-துவமனை நிர்வாக இயக்குனருமான டாக்டர் சுதாகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பா-ளராக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்-டையன் பூஜை செய்து, பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., சத்-தியபாமா, கோபி நகர்மன்ற தலைவர் நாகராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் கந்தவேல் முருகன், த.வெ.க., மாநகர் மாவட்ட வழக்கறிஞ-ரணி அமைப்பாளர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
