ADDED : ஜூலை 14, 2026 05:59 AM
ஈரோடு; ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வரும் வழித்தடங்களில் உள்ள கடைகள், சாலையை ஆக்கிரமித்துள்ளதால் பஸ்களை ஓட்-டுவதில் டிரைவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதேபோல் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் செயல்படும் தள்ளுவண்டி கடைகள், வணிக வளாக பாதை ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி அடைந்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது. இதை-யடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையர் அர்பித் ஜெயின் உத்தரவிட்டார். அதிகாரிகள் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர். பஸ் ஸ்டாண்ட் வளாகம், வணிக கட்டடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.நாச்சியப்பா இரண்டாவது வீதியில் செயல்படும் வணிக கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த கான்கிரீட் திட்டுகளை இடித்து அகற்றினர். சாலையோரம் போடப்பட்டிருந்த கடை டேபிள், பிளக்ஸ் பேனர்-களை அகற்றினர்.
மீண்டும் சாலையை ஆக்கிரமித்தால் அபராதம் விதிக்கப்படும் என கடைக்காரர்களுக்கு எச்ச-ரிக்கை விடுத்தனர்.
