ADDED : ஜூலை 14, 2026 06:00 AM
ஈரோடு; முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால், 'தமிழ்நாடு' என பெயர் சூட்டிய நாளான, ஜூலை, 18, 'தமிழ்நாடு நாளாக' கொண்டாடப்படுகிறது. தமிழ் வளர்ச்சி துறை மூலம் அனைத்து மாவட்ட பள்ளி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சு போட்-டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்-படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகம் புதிய கட்டடம் முதல் தள கூட்ட அரங்கில் காலை, 10:00 மணிக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடக்கிறது. இப்போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும்.கட்டுரை போட்டி, 'தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை' என்ற தலைப்பிலும், பேச்சுப்போட்டி, 'நான் விரும்பும் தமிழ்நாடு, அன்-றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய நவீன தமிழ்நாடு, இளைஞர்களின் பார்வையில் தமிழ்-நாடு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு, வீரம் செறிந்த தமிழ்நாடு' என்ற தலைப்பில் போட்டிகள் நடக்க உள்ளது. போட்டிகளில் வெல்லும் மாணவர்க-ளுக்கு முதல் மூன்று பரிசாக தலா, 10,000, 7,000, 5,000 ரூபாய் வழங்கப்படும்.
