தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'ஒரு கிராம் மண்ணில் 150 கோடி நுண்ணுயிர்'

'ஒரு கிராம் மண்ணில் 150 கோடி நுண்ணுயிர்'

'ஒரு கிராம் மண்ணில் 150 கோடி நுண்ணுயிர்'


ADDED : ஜூன் 24, 2026 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 04:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:''ஒரு கிராம் மண்ணில், 150 கோடி நுண்ணுயிர் உள்ளது,'' என்று, மத்திய கிழங்கு வகை ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி முத்துராஜ் பேசினார்.

ஈரோடு மாவட்டம் கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில், சமச்சீர் உர பயன்பாடு மற்றும் இயற்கை விவசாயம் குறித்து, ஒரு நாள் கருத்துப்பட்டறை நேற்று நடந்தது. இதில் திருவனந்தபுரம் மத்திய கிழங்கு வகை ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி முத்துராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் பேசியதாவது:

மண்ணுக்கு உயிர் இருப்பதால் தான், விதையிட்டதும் முளைக்கிறது. உர பயன்பாட்டால் தன்மையை இழப்பதுடன், விளைச்சலும் குறைந்து, மண்ணின் சத்து மறைகிறது. மண் வளத்தை அறிய, மண் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு கிராம் மண்ணில், 150 கோடி நுண்ணுயிர் உள்ளது. அதாவது இந்தியாவின் மக்கள்தொகையை விட, ஒரு கிராம் மண்ணில் உயிர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் உரம், பூச்சிமருந்து பயன்பாட்டால் நுண்ணுயிர் அழிகிறது.

விவசாயிகள், 50 ஆண்டுகளுக்கு முன் உரங்கள் பயன்படுத்தாததால், மகசூல் அதிகரித்ததுடன், ருசியான நெல்லும் நமக்கு கிடைத்தது. தற்போது நெல், வாழை, மஞ்சள் பயிருக்கு உரங்கள் பயன்படுத்தும் சூழல் உள்ளது. அதனால்தான் இன்று மண் விஷமானதுடன், நாம் சாப்பிடும் பொருளும் விஷமாகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

ஈரோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, இணை இயக்குனர் சிவக்குமார் தலைமை வகித்து பேசியதாவது: மண் உயிரோடு இருந்தால் தான் நாம் உயிரோடு இருக்க முடியும். மண்ணில் கரிம சத்து குறைந்தால், விளைச்சலும் குறையும். முன்பு சாகுபடியில், 80 கிலோ எடையிருந்த வாழைத்தார், 30 கிலோ எடை கிடைப்பதே தற்போது அரிதாக உள்ளது. நமது வேளாண்மையில், உழைப்பு, முதலீட்டை, விளைச்சலுடன் கணக்கிட்டால், நஷ்டம் தான் ஏற்படுகிறது. அதை ஈடுகட்ட சமச்சீர் உர பயன்பாடு என்ற நிலையில் உள்ளோம். அடுத்த தலைமுறைக்கு மண்ணை நாம் பாதுகாப்பாக விட்டு செல்ல வேண்டும். இவ்வாறு பேசினார். கோபி வேளாண் அறிவியல் நிலைய முதன்மை விஞ்ஞானி அழகேசன் பேசினார். விஞ்ஞானிகள் பச்சியப்பன், சிவா மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us