ADDED : ஜூன் 24, 2026 04:41 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சிவகிரி,
அஞ்சூர் கிராமம் முத்து கவுண்டன்பாளையத்தை சேர்ந்த விவசாய கூலி
தொழிலாளி ராமலிங்கம் மகள் தர்ஷினி, 17; முத்துார் மேட்டுக்கடை அருகே
ஒரு அட்டை கம்பெனியில் வேலை செய்தார்.
நேற்று முன்தினம் காலை,
ஜெராக்ஸ் எடுக்க சிவகிரி செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே
சென்றவர், வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம், நண்பர்கள்,
உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் தர்ஷினி குறித்து தகவல் இல்லை.
அவருடன்
வேலை செய்த வட மாநில வாலிபர் அழைத்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகம்
இருப்பதாக, தர்ஷினியின் தாய் சுமதி, போலீசில் புகார் செய்தார்.
சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்தனர்.
