ADDED : ஆக 05, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அருகே சங்கராப்பாளையத்தில், மளிகை கடை நடத்தி வருபவர் சம்பத்குமார், 49; இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பதாக
வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று கடையில் சோதனை செய்தனர். இதில் பதுக்கி வைத்திருந்த, 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

