/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேலை வாய்ப்பு முகாமில் 15 பள்ளி மாணவர் தேர்வு
/
வேலை வாய்ப்பு முகாமில் 15 பள்ளி மாணவர் தேர்வு
ADDED : மார் 25, 2024 07:09 AM
அந்தியூர் : கோவையை தலைமையிடமாக கொண்ட டைடன் கடிகார நிறுவனம் சார்பில், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
இதில் சுற்றுவட்டார கிராம அரசு பள்ளிகளை சேர்ந்த, பிளஸ் டூவில் தொழிற்கல்வி படித்த, 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 10 பேர், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மாத சம்பளம் வழங்குவதோடு உயர்கல்வி, இளங்கலை தொழிற்கல்வி பட்டய படிப்பு, தங்குமிடம், உணவும் வழங்கப்படும். பணி நியமன ஆணையை, தலைமை ஆசிரியை பானுமதி வழங்கினார்.இதுகுறித்து அரசு பள்ளி மாணவர்கள் கூறியதாவது: தங்களுக்கு பிளஸ் டூ முடித்தவுடன் மாத சம்பளத்துடன் கூடிய உயர் கல்வி படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தங்களுக்கு பெரிய வரப்பிரசாதம். குடும்பத்தாருக்கும் பேருதவியாக இருக்கும். இவ்வாறு கூறினர்.

