ADDED : மே 04, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:காங்கேயம் அடுத்த சிவன்மலை, சாவடிப்பாளையம், மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; பட்டி அமைத்து, 80க்கும் மேற்பட்ட செம்மறி ஆடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார். நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு விட பட்டிக்கு சென்றார்.
அப்போது, ௧௫ ஆடுகள் இறந்து கிடந்தன. எட்டு ஆடுகள் உயிருக்கு போராடியபடி காணப்பட்டது. அவர் புகாரின்படி சென்ற காங்கேயம் கால்நடை மருத்துவர் உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டார். தெருநாய்கள் கடித்ததில் ஆடுகள் பலியாகி விட்டன. காங்கேயம் பகுதியில் தொடர்ந்து, தெருநாய்களுக்கு ஆடுகள் பலியாவது, விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.