/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆந்திரா தேர்தலுக்கு 156 போலீசார் பயணம்
/
ஆந்திரா தேர்தலுக்கு 156 போலீசார் பயணம்
ADDED : மே 05, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் நடந்த லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்காக, ஆந்திரா
மாநில போலீசார், அம்மாநில ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் வரும், 13ல் லோக்சபா
தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, ஆந்திரா மாநில தேர்தல் பாதுகாப்பு
பணிக்காக, ஈரோடு மாவட்டத்தில் இருந்து, 66 போலீசார் மற்றும் 90 ஊர் காவல்
படையினர் என, 156 பேர் செல்லவுள்ளனர். வரும், 9ம் தேதி இரவு
புறப்படும் அவர்கள், 14ம் தேதி வரை பணியில் ஈடுபடுவர்.