/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஆம்னி வேனுடன் இருவர் கைது
/
1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஆம்னி வேனுடன் இருவர் கைது
1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஆம்னி வேனுடன் இருவர் கைது
1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஆம்னி வேனுடன் இருவர் கைது
ADDED : அக் 29, 2025 01:05 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார், குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகுமார், எஸ்.ஐ., மேனகா தலைமையிலான போலீசார், பி.பெ.அக்ரஹாரம்-பவானி சாலையில் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது வந்த ஒரு ஆம்னி வேனில், 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்தது. வேனில் வந்த இருவரிடம் விசாரித்தனர். ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த கண்ணன், 46, பன்னீர்செல்வம், 60, என தெரிந்தது.
மக்களிடம் ரேஷன் அரிசி வாங்கி, வடமாநில தொழிலாளர்களுக்கு விற்க கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டனர். இருவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். ரேஷன் அரிசி, வேனை பறிமுதல் செய்தனர்.