/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் பணியிட மாற்றம் பெற்ற 169 ஆசிரியர்கள்
/
ஈரோடு மாவட்டத்தில் பணியிட மாற்றம் பெற்ற 169 ஆசிரியர்கள்
ஈரோடு மாவட்டத்தில் பணியிட மாற்றம் பெற்ற 169 ஆசிரியர்கள்
ஈரோடு மாவட்டத்தில் பணியிட மாற்றம் பெற்ற 169 ஆசிரியர்கள்
ADDED : ஜூலை 24, 2025 02:05 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நடந்த, ஆசிரியர் பொதுப்பணியிட மாறுதல் கலந்தாய்வில், 169 பேர் பணியிடம் மாற்றம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டமும் பணியிடம் மாற்றம் செய்யப்படுகின்றனர்.
நடப்பாண்டிற்கான கலந்தாய்வு கடந்த இரு வாரங்களாக நடந்தது. கலந்தாய்வு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், 74 பேர் மாவட்டத்திற்குள்ளும், 30 பேர் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். முதுகலை ஆசிரியர்கள், 47 பேர் மாவட்டத்திற்குள்ளும், 18 பேர் மாவட்டம் விட்டு மாவட்டமும் பணியிடம் மாற்றம் பெற்றுள்ளனர். பிற மாவட்டத்தில் இருந்தும், ஈரோடு மாவட்டத்திற்கு பணியாற்ற ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் பெற்றுள்ளனர் என, பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.