தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சட்டசபை தேர்தலால் 17 இன்ஸ்பெக்டர் மாற்றம்

சட்டசபை தேர்தலால் 17 இன்ஸ்பெக்டர் மாற்றம்

சட்டசபை தேர்தலால் 17 இன்ஸ்பெக்டர் மாற்றம்


ADDED : பிப் 21, 2026 09:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 09:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: சட்டசபை தேர்தலுக்காக, ஈரோடு மாவட்டத்தில், 17 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஒரே இடத்தில் மூன்றாண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணி செய்த, சொந்த மாவட்டத்தில் பணி செய்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.இதன்படி கோவை சரகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பணியாற்றும், 33 இன்ஸ்பெக்டர்களை கோவை சரக டி.ஐ.ஜி., சசிமோகன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதில் ஈரோடு டவுன் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அனுராதா - நீலகிரி மாவட்டம் ஊட்டி டவுன் மேற்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். வீரப்பன்சத்திரம் செந்தில்பிரபு - கோத்தகிரி, சூரம்பட்டி வைரம் - நீலகிரி சைபர் கிரைம், மொடக்குறிச்சி மணிகண்டன் - கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பெருந்துறை மகளிர் ஸ்டேஷன் ராஜேஸ்வரி, ஈரோடு டவுன் சட்டம் ஒழுங்கு, சித்தோடு அமிர்தலிங்கம் - கடத்துார், கொடுமுடி சரவணன் - திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுார், காஞ்சிகோவில் ஜெகநாதன் - கொடுமுடி, திருப்பூர் குற்ற ஆவண பாதுகாப்பக பிரிவு கலையரசி - காஞ்சிகோவில், கடத்துார் அரவிந்தராஜன் - கோபி, கோபி இன்ஸ்பெக்டர் தமிழரசு - திருப்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அம்மாபேட்டை கவிதா - நீலகிரி ஊட்டி ரூரல் சர்க்கிள், ஊட்டி டவுன் மேற்கு தாமோதரன் - மொடக்குறிச்சி, மேட்டுப்பாளையம் சின்னகமணன் - வீரப்பன்சத்திரம், அவிநாசி மகளிர் சாந்தி - பெருந்துறை, பெருமாநல்லுார் சட்டம் ஒழுங்கு விநாயகம் - சித்தோடு, காத்திருப்போர் பட்டியலில் இருந்த அர்ஜூன்குமார் - சூரம்பட்டி, மற்றொரு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் - ஆசனுார், மகேஸ்வரி - அம்மாபேட்டை, பெரிய நாயக்கன்பாளையம் மகளிர் இன்ஸ்பெக்டர் இந்திரை சோபியா - ஈரோடு மகளிர், திருப்பூர் கொங்கு நகர் டிராபிக் முருகேசன் - ஈரோடு தெற்கு டிராபிக் போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us