/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து விதிமீறல் 1,736 வழக்குகள் பதிவு
/
போக்குவரத்து விதிமீறல் 1,736 வழக்குகள் பதிவு
ADDED : ஜூலை 04, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமீறலை கண்காணித்து வழக்குப்பதிவு செய்கின்றனர்.
இதன்படி கடந்த ஜூன் மாதம், குடிபோதை வாகன இயக்கம் தொடர்பாக, 149 வழக்குகள், ஹெல்மெட் இன்றி டூவீலரில் சென்றது தொடர்பாக, 768, சீட் பெல்ட் அணியாமல் சென்றது 29, மொபைல் பேசியபடி வாகனம் இயக்கியது 52, விபத்தை ஏற்படுத்தும் விதமாக சென்றது 58, டூவீலரில் மூவர் சென்றதாக, 54 வழக்குகள் உட்பட, 1,736 வழக்குகள் பதிவு செய்து, ௭.௩௪ லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்தனர். போதையில் வாகனம் இயக்கிய, 85 பேரின் உரிமத்தை, தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரைத்தனர்.