/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2 வீடுகளில் 18 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு
/
2 வீடுகளில் 18 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு
ADDED : செப் 09, 2025 01:53 AM
மொடக்குறிச்சி, மொடக்குறிச்சி அவல் பூந்துறை ரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் மோகன சுந்தரம், 51; பைனான்ஸ் மற்றும் கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். இவர் மனைவி ஹேமலதா, 47; தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நேற்று முன் தினம் காலை சென்று விட்டு இரவில் வீடு திரும்பினர். முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 13 பவுன் நகை, 21 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.
இதேபோல் நன்செய் ஊத்துக்குளி அருகே பொன் நகரில், மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஆறுமுகம் வீட்டில், ஐந்து பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் திருட்டு போயுள்ளது. இரு சம்பவங்கள் குறித்தும், மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் முகமூடி அணிந்து வந்த நான்கு பேர், வீட்டு சுவர் ஏறி குதித்து சம்பவத்தில் ஈடுபட்ட, 'சிசிடிவி' கேமரா பதிவு கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.