ADDED : ஆக 13, 2026 06:08 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி அடுத்த மூலப்பாளையம்
பவானி ஆற்று பாலம் அருகே, கஞ்சா விற்பனை செய்வதாக சித்தோடு
போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற
போலீசார், அங்கு நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரிக்கையில்,
பல்லவங்கித சிவராம்ஜி, 24, என்பதும், புதுச்சேரி ஏனாம் பகுதியை
சேர்ந்தவர் என்றும், இவரிடம் இருந்து, 19.800 கிலோ கஞ்சா விற்பனைக்காக
வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை
பறிமுதல் செய்தனர்.
