ADDED : ஆக 13, 2026 06:07 AM
ஈரோடு:ஈரோட்டில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில்
வாரத்தில், 5 நாட்கள் வங்கி பணி என்ற வங்கி பணியாளர்கள்,
அதிகாரிகளின் சங்கங்களின் கோரிக்கையை ஐ.பி.ஏ. (இந்திய வங்கிகள்
அசோசியேஷன்) ஏற்றுக் கொண்டது. ஆனால் நடைமுறைப்படுத்த மத்திய அரசு
தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இச்செயலை கண்டித்து
வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷம்
எழுப்பினர்.
வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின்
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தலைமை வகித்தார். அகில இந்திய
வங்கி அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த அல்டாப் ஹூசேன், சந்திரசேகரன்
மற்றும் வேலுசாமி முன்னிலை வகித்தனர்.
* திருப்பூர் மாவட்டம்,
தாராபுரம் கனரா வங்கி கிளை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தாராபுரம்
தாலுகா வங்கி ஊழியர் சங்க செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
வங்கி ஊழியர் சங்கத்தின் தாலுகா தலைவர் பாலாஜி உட்பட, 20க்கும்
மேற்பட்டோர் பங்கேற்றனர்.
