மின்சாரம் தாக்கி மாணவன் பலி: தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
மின்சாரம் தாக்கி மாணவன் பலி: தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
ADDED : ஆக 13, 2026 06:07 AM
பவானி:மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்தது தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
ஈரோடு
மாவட்டம், பவானி அருகே ஏமம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன், செல்வி
தம்பதியின் மகன் யோகேஸ், 11. குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்
பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், உணவு
இடைவேளியின் போது, பள்ளியில் தண்ணீர் வராததால், டிபன் பாக்ஸ் கழுவ
அருகில் உள்ள துவக்கப்பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கே மின்சார கம்பி
அறுந்து விழுந்துள்ளது. அதை கவனிக்காமல் மிதித்த யோகேஷ் மயங்கி
விழுந்தார். பின்னர் மாணவனை மீட்டு, மயிலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார
நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள்,
ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாணவன் இறந்ததை
கண்டித்து, உறவினர்கள், மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டனர். பின்னர் அவர்களை பவானி போலீசார் அப்புறப்படுத்தினர்.
மாணவன் உடல் பிரேத பரிசோதனைக்காக, பெருந்துறை அரசு மருத்துவக்
கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நள்ளிரவு, 1:00
மணியளவில் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர்
சொந்த ஊரில், மாணவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில்,
குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை
நிர்மலாவை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட கலெக்டர் கந்த
சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மின்சார துறை, உள்ளாட்சித் துறை மற்றும்
கல்வித்துறை
ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பள்ளியில்
ஆய்வு செய்தனர். மாணவன் உயிரிழப்பை தொடர்ந்து, குப்பிச்சிப்பாளையம்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிக்கு நேற்று ஒரு
நாள் விடுமுறை விடப்பட்டது. மேலும் இறந்த மாணவன் வீடு, பள்ளி
வளாகத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, பவானி போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடும்பத்துக்கு கருணைத்தொகை
இந்நிலையில், நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்த, குப்பிச்சி
பாளையம் கிராம மக்கள் மற்றும் இறந்த மாணவனின் தந்தை ஈஸ்வரன் ஆகியோர், கலெக்டர் கந்தசாமி
யிடம்
மனு வழங்கி, 'மாணவனின் இறப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆசிரியர்களின் அலட்சிய போக்கை கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும். பள்ளி
யில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்' என, வலியுறுத்தினர்.
மனுவை பெற்ற கலெக்டர் கந்த
சாமி, மாணவனின் இறப்புக்காக அவரது குடும்பத்தாரிடம் கருணைத்
தொகையாக,
ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் மூலம், பள்ளியை ஆய்வு செய்து தேவையான அடிப்படை வசதிகள்
மேற்கொள்ளப்படும். இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தி,
உரியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என,
உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
