ADDED : செப் 26, 2026 06:46 AM

சென்னிமலை:சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆதி சைவ அர்ச்சகர்கள் சார்பில், 19ஆம் ஆண்டு பாத யாத்திரை தீர்த்தாபிஷேக பெருவிழா விமரிசையாக நடந்தது.
இதையொட்டி கைலாசநாதர் கோவிலில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக புறப்பட்டு, காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக நடந்து கோவிலை அடைந்தனர்.
இதை தொடர்ந்து கைலாசநாதர் கோவிலில் இருந்து சிவாச்சாரியார்கள் தீர்த்தக் குடங்களுடனும், பெண்கள் பால் குடங்களுடனும் நான்கு ரத வீதிகள் வழியாக நேற்று காலை ஊர்வலமாக மலை கோவிலுக்கு சென்றனர். அங்கு பல்வேறு பூஜைகளை தொடர்ந்து மூலவர் சிரகிரி வேலவனுக்கு தீர்த்தாபிஷேகம் நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மலை அடிவாரத்தில் அன்னதானம் வழங்கப்
பட்டது.
விழா ஏற்பாடுகளை ஆதிசைவ அர்ச்சக அறக்கட்டளை தலைவர் மதி குருக்கள் தலைமையிலான நிர்வாகிகள், பாதயாத்திரை தீர்த்தாபிஷேக குழுவினர் செய்திருந்தனர்.
