தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டாஸ்மாக் விற்பனையாளர் தற்கொலை முயற்சி: ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார்

டாஸ்மாக் விற்பனையாளர் தற்கொலை முயற்சி: ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார்

டாஸ்மாக் விற்பனையாளர் தற்கொலை முயற்சி: ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார்


ADDED : செப் 25, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:சத்தியமங்கலத்தை அடுத்த, பண்ணாரி சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரியும் விற்பனையாளரின் தற்கொலை முயற்சிக்கு காரணமான, மாவட்ட மேலாளர், மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர், (சி.ஐ.டி.யு.,) நேற்று, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவின் விபரம்:

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. கடை மேற்பார்வையாளராக பழனிசாமி உள்ளார். வேலுசாமி, ஆனமலை, பழனிசாமி ஆகிய மூன்று பேர் விற்பனையாளராகவும், ராஜப்பன் என்பவர் உதவி விற்பனையாளராகவும் உள்ளனர். கடந்த 17ல் விற்பனையாளரான வேலுசாமி, தனக்கு ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லை. நிற்க கூட முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதற்கு மேற்பார்வையாளர் பழனிசாமி, விடுப்பு கொடுக்க முடியாது. வேலையை

ராஜினாமா செய்து விட்டு போ என கூறியுள்ளார். இதனால், 18ல் மாவட்ட மேலாளர் ஆனந்தகுமாரிடம், தனது உடல்நிலை குறித்தும், பணியாற்ற முடியாத சூழ்நிலை குறித்தும் முறையிட்டு வேலுசாமி விடுப்பு கோரியுள்ளார். விடுப்பு கொடுக்க முடியாது என, மாவட்ட மேலாளரும் தெரிவித்துள்ளார்.

மனமுடைந்த வேலுசாமி, 19ல் அரளி விதையை அரைத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்கொலைக்கு முன், காணொளி மூலம் அவர் வாட்ஸ்ஆப்பில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் தற்கொலை செய்வதற்கு காரணமான, கடை மேற்பார்வையாளர் பழனிசாமி, மாவட்ட மேலாளர் ஆனந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us