ADDED : மார் 22, 2025 01:23 AM
2 நாட்களுக்கு ரயில் ரத்து
ஈரோடு:சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே சாவடிப்பாளையம் யார்டில் தண்டவாளம் புதுப்பித்தல் பணி நடக்கிறது. இதனால் நாளை (23) மற்றும் 25ம் தேதி என இரு நாட்கள் ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ரயில், ஈரோடு வரும் ரயில்களில் மாற்றம் செய்யப்படுகிறது.
ஈரோடு ஸ்டேஷனில் இருந்து மதியம், 2:00 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்-16845), 23 மற்றும் 25ல் கரூரில் இருந்து மதியம், 3:05 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூர் சந்திப்புக்கு இயக்கப்படாது. அவ்விரு நாட்களிலும் கரூர் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை வரை இயங்கும்.
அதுபோல செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், செங்கோட்டையில் காலை, 5:10 மணிக்கு புறப்பட்டு, கரூர் வரை இயக்கப்படும். அதுபோல திருச்சியில் இருந்து காலை, 7:20 மணிக்கு புறப்படும் ஈரோடு - திருச்சி பாசஞ்சர் (எண்-56809), 23 மற்றும் 25ல் கரூர் வரை மட்டும் இயக்கப்படும். இரு நாட்களிலும் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது. சாவடிப்பாளையத்தில் பணிகள் முடிந்ததும், வழக்கம்போல முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.