/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் பார் ஊழியர் மீது தாக்குதல் 2 பேர் கைது; பா.ஜ., நிர்வாகி ஓட்டம்

ADDED : நவ 15, 2025 03:13 AM
காங்கேயம்:காங்கேயம் அருகே மேட்டுப்பாறையில் டாஸ்மாக் கடை, பார், திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., செயலாளர் விஜயகுமார், 48, இடத்தில் செயல்படுகிறது. திருப்பூரை சேர்ந்த அழகர்சாமி என்ப-வருக்கு உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இதில் இருவருக்கும் வாடகை தொடர்பாக பிரச்னை ஏற்பட்-டுள்ளது. நேற்று முன்தினம் காலை, அடியாட்களுடன் கார், ஆம்-புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் பாருக்கு சென்ற விஜயகுமார், அங்கு வேலை செய்தவர்களை கட்டையால் அடித்து தாக்கியுள்-ளனர். இதில் திருப்பூர் குமார் நகர் கார்த்திக், 25, கருப்புசாமி, 22, பெத்த-சாமி, 25, ஆனந்த், 20, ஆகியோர் காயமடைந்தனர். நான்கு பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்-தனர். இதுகுறித்த புகாரின்படி ஊதியூர் போலீசார் வழக்குப்ப-திவு
செய்தனர். ரகளையில் ஈடுபட்ட பங்காம்
பாளையம் சுரேஷ், 25,
திருப்பூர் மனோஜ்குமார், 27, ஆகியோரை கைது செய்து, அவர்கள் வந்த
காரை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவான பா.ஜ., மாவட்ட செயலாளர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோரை தனிப்படை அமைத்து, ஊதியூர் போலீசார் தேடி வருகின்றனர்.