ADDED : ஜன 05, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போதை மாத்திரை ௨ பேர் கைது
ஈரோடு, ஈரோடு, காவேரி சாலையில் கருங்கல்பாளையம் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது பைக், ஸ்கூட்டரில் வந்த இருவரிடம் விசாரித்தனர். கருங்கல்பாளையம், ராஜராஜன் வீதி சரவணன், 49; அரசிளங்கோ வீதி கார்த்திகேயன், 21, என்பது தெரியவந்தது. பைக்கில் சோதனை செய்தபோது விற்பனைக்காக, 10 வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக எடுத்து சென்றது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.