ADDED : நவ 05, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2 துணை பதிவாளர்
பொறுப்பேற்பு
ஈரோடு, நவ. 5-
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தில், ஈரோடு துணை பதிவாளர் மற்றும் மண்டல மேலாளராக யசோதாதேவி பொறுப்பேற்றார். இதற்கு முன் சத்தி கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் கள அலுவலராக பணி செய்து, பதவி உயர்வில் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதேபோல ஈரோடு பால் கூட்டுறவு தணிக்கை துறை துணை பதிவாளர் மற்றும் துணை இயக்குனராக ராமகிருஷ்ணன் பொறுப்பேற்றார். இதற்கு முன் தேனி மாவட்ட பொது வினியோக திட்ட துணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்தார். பதவி உயர்வில் இங்கு பொறுப்பேற்றுள்ளார்.