/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி வேன் கவிழ்ந்து 2 குழந்தைகள் காயம்
/
பள்ளி வேன் கவிழ்ந்து 2 குழந்தைகள் காயம்
ADDED : செப் 28, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை:ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளி செயல்படுகிறது. பள்ளிக்கு ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் ஒரு வேனில், 16 மாணவ, மாணவியர், மூன்று ஆசிரியைகள் சென்றனர்.
மேலப்பாளையத்தை சேர்ந்த குருசாமி, 40, ஓட்டினார். அம்மாபாளையம் அடுத்த எம்.எஸ்.கே., நகர் அருகே சென்றபோது, ஒரு மாணவி கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் தவறி விழுந்து, வேன் கிளட்ச் பிளேட்டில் சிக்கியது. இதனால் டிரைவர் திடீரென்று பிரேக் பிடித்தபோது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் இரு மாணவியர் மட்டும் லேசான காயமடைந்தனர். சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் வாகனத்தை கிரேன் உதவியுடன் மீட்டனர்.