ADDED : பிப் 21, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி,:வெள்ளித்திருப்பூர்
அருகே பட்லுார் கெம்மியம்பட்டி காலனியை சேர்ந்தவர்கள் அம்மாசை, 70;
பழனி, 75; இருவரும் அருகருகில் குடிசையில் வசிக்கின்றனர்.
குடிசையின்
கூரை தகர சீட்டால் வேயப்பட்டுள்ளது. நேற்று காலை அம்மாசை வீட்டில்
மின் கசிவு ஏற்பட்டு, குடிசை எரியத் தொடங்கியது. பழனியின்
குடிசைக்கும் தீ பரவியது. அந்தியூர் தீயணைப்புத்துறையினர் தீயை
அணைத்தனர். ஆனாலும் தீயில் குடிசைகள், கடலைக்கொடி போர்
தீக்கிரையானது. வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.

