/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2 அரசு பஸ்கள் மோதி விபத்து 3 பெண் பயணிகளுக்கு காயம்
/
2 அரசு பஸ்கள் மோதி விபத்து 3 பெண் பயணிகளுக்கு காயம்
2 அரசு பஸ்கள் மோதி விபத்து 3 பெண் பயணிகளுக்கு காயம்
2 அரசு பஸ்கள் மோதி விபத்து 3 பெண் பயணிகளுக்கு காயம்
ADDED : ஏப் 24, 2025 01:54 AM
புன்செய்புளியம்பட்டி, ஏப் 24
பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து, பழனி செல்லும் அரசு பஸ் நேற்று மதியம் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பவானிசாகர் சாலையில், கொத்தமங்கலம் ராஜீவ் நகர் அருகே சென்றபோது, சாலை வளைவில் எதிரே வந்த அரசு டவுன் பஸ்ஸிற்கு வழி விடுவதற்காக, அரசு பஸ் சற்று வேகத்தை குறைத்த நிலையில், அதே திசையில் பின்னால் பண்ணாரியில் இருந்து புளியம்பட்டி நோக்கி வந்து கொண்டு இருந்த பி1 அரசு டவுன் பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பழனி செல்லும் பஸ்ஸின் பின்புறம் மோதியது.
இதில் டவுன் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் அரசு டவுன் பஸ்ஸின் முன்பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்த, மூன்று பெண் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயம்பட்டவர்களை மீட்டு, கொத்தமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பவானிசாகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.