ADDED : செப் 26, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
பெரியசேமூர், ராம்நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ஜன்னத்துல்
பிரதோஷ், 37; இவரது மகன் அபுபக்கர் சித்திக், 19; தாயாருடன்
ஈ.பி.பி., நகரில் உள்ள பாட்டி வீட்டுக்கு சித்திக் சென்றார். பக்கத்து
வீட்டில் வசிக்கும் அகமது, 38, பகதுார் பாட்ஷா, 43, ஆகிய இருவரும்,
வீட்டை காலி செய்யும்படி கூறி, தகராறில் ஈடுபட்டனர்.
இருவரும் தகாத
வார்த்தை பேசி, இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனராம்.
புகாரின்படி இருவரையும், வீரப்பன்சத்திரம் போலீசார் கைது
செய்தனர்.
