ADDED : செப் 26, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:சென்னிமலை
யூனியன் அலுவலக வளாகத்தில், ஒரு புள்ளிமானை தெரு நாய்கள் கூட்டமாக
சேர்ந்து, நேற்று கடித்து குதறி கொண்டிருந்தன. இதைப்பார்த்த அலுவலக
ஊழியர்கள் நாய்களை விரட்டி விட்டு பார்த்தபோது, மான் இறந்து விட்டது
தெரிய வந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்
தெரிவித்தனர். மான் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பினர்.
மான் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாக தெரிவித்தனர்.
