ADDED : ஆக 30, 2026 05:45 AM
ஈரோடு:ஈரோடு மூலப்பாளையம்
ஜீவா நகர் ஏழுமலை மகன் கவுதம், 17; இவரது சகோதரர் ரோஷன் இரு
மாதத்துக்கு முன் போதை மாத்திரை விற்பதாக, ஈரோடு சாஸ்திரி நகர்
விநாயகர் கோவில் வீதி வைரவேல், 22; ஈரோடு ரகுபதி நாயக்கன்பாளையம்
ரெயின்போ கார்டன் பிரதாப், 22, ஆகியோர் மீது போலீசில் புகார்
கூறியுள்ளார். இதனால் இருவரும் ரோஷனை பீர் பாட்டிலால் அடித்தனர்.
ஈரோடு
அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்த கவுதம்
புகாரளித்தார். இதன் அடிப்படையில் ஈரோடு தாலுகா போலீசார், வைரவேல்,
பிரதாப்பை கைது செய்தனர். கைதான வைரவேல் மீது, 12 குற்ற வழக்குகள்
போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளது. இதில் தொடர்புடைய ஈரோடு
மூலப்பாளையம் ஜீவானந்தம் வீதி தீபக்குமார், 24; கோபி அக்கரை
கொடிவேரி கணக்கு பிள்ளை வீதி நவீன்குமார், 32, ஆகியோரை ஈரோடு தாலுகா
போலீசார் கைது செய்தனர்.
