ADDED : ஆக 30, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை,:அத்திக்கடவு-அவிநாசி
திட்ட கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம், பெருந்துறையில் நடந்தது.
நீலகிரி மலையில் உற்பத்தியாகி, கேரளா வழியாக அரபிக்கடலில் கலந்து
வீணாகும், பாண்டியாறு நீரை தடுத்து, பவானி ஆற்றுக்கு கொண்டு
வரவேண்டும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட
மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தியாகும். பவானி, நொய்யல்,
அமராவதி, வரதமா அணை இவைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ள
காலங்களில் வரும் நீரை பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ள தமிழக பசுமை
நீர்வலை மின்னல் திட்டத்தை, அதன் சாத்திய கூறுகளை தமிழக அரசு ஆய்வு
செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
