/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
60 கிலோ கஞ்சா கடத்த முயற்சிஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது
/
60 கிலோ கஞ்சா கடத்த முயற்சிஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது
60 கிலோ கஞ்சா கடத்த முயற்சிஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது
60 கிலோ கஞ்சா கடத்த முயற்சிஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது
ADDED : மே 01, 2025 02:05 AM
ஆற்காடு::ஆற்காட்டில், 60 கிலோ கஞ்சா மூட்டை கடத்த முயன்ற ஆந்திராவை சேர்ந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஆற்காடு போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 60 கிலோ கஞ்சாவை இரு வாலிபர்கள் காரில் கடத்தி வந்ததை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டணத்தை சேர்ந்த திதாரி வசந்தகுமார், 24, மற்றும் கேமிலி சாந்து, 25, என தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் வைத்திருந்த, 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.