/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.10 லட்சம் மோசடி புகாரில் ஈரோட்டை சேர்ந்த 2 பேர் கைது
/
ரூ.10 லட்சம் மோசடி புகாரில் ஈரோட்டை சேர்ந்த 2 பேர் கைது
ரூ.10 லட்சம் மோசடி புகாரில் ஈரோட்டை சேர்ந்த 2 பேர் கைது
ரூ.10 லட்சம் மோசடி புகாரில் ஈரோட்டை சேர்ந்த 2 பேர் கைது
ADDED : அக் 06, 2024 03:57 AM
ஈரோடு: திண்டுக்கல், ஆர்.எம். காலனியை சேர்ந்தவர் சசிகுமார், 52; இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் போலீசில், இவர் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: இரும்பு பொருட்கள் தேவைப்படுகிறது என இணைய தளத்தில் விளம்பரம் செய்தேன். இதைப்பார்த்த ஈரோடு, வெட்டுக்காட்டு வலசில் உள்ள, முருகப்பா ஸ்டீல் மற்றும் ஹார்டுவேர் கம்பெனி, சந்தை விலையை விட இரண்டு ரூபாய் குறைவாக பொருட்களை சப்ளை செய்வதாக உறுதியளித்தனர். இதனால் அவர்கள் வங்கி கணக்குக்கு, 23.41 லட்சம் ரூபாய் அனுப்பினேன். குறித்த நேரத்தில் பொருட்கள் அனுப்பாததால், ஆர்டரை ரத்து செய்து பணத்தை திருப்பி கேட்டேன். பதில் கூறாததால் நேரில் வந்து பேசினேன். அப்போது பழைய இரும்பு பொருட்களை, 13 லட்சத்துக்கு சப்ளை செய்தனர். மீதி, 10 லட்சம் ரூபாயை, 10 நாட்களுக்குள் தருவதாக உறுதியளித்தனர். இரண்டு மாதமாகியும் தரவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.மனுவை விசாரித்த போலீசார், முருகப்பா ஸ்டீல் உரிமையாளர் சந்திரசேகர், அவரது மனைவி சண்முக வடிவு, மேலாளர்கள் இருவர் என, நான்கு பேர் மீது, மோசடி வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் மேலாளர்களான கொடுமுடி, ஊஞ்சலுார் மயில்சாமி, 38; அந்தியூர், செம்புளிச்சாம்பாளையம், சோமசுந்தரம் மனைவி தமிழ் செல்வி, 41. ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுக்கு பின் மயில்சாமியை, ஈரோடு கிளை சிறையிலும், தமிழ் செல்வியை கோவை மத்திய சிறையிலும் போலீசார் அடைத்தனர்.