ADDED : அக் 22, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் திருச்சி, எடமலைப்பட்டி புதுாரை சேர்ந்தவவர் முகமது இதரீஸ், 46; கோவை--கரூர் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் மாலை ஸ்பிளண்டர் பைக்கில் ஓலப்பாளையம் அருகே சென்றார். எதிரே வந்த பைக் மோதியதில்
முகமது இதரீஸ் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.
* ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மில் தொழிலாளி டிரானா சூனா, 47; வெள்ளகோவிலில் நடேசன் நகர் அருகே கரூர்--கோவை மெயின் ரோட்டை கடக்க முயன்றபோது கோவையிலிருந்து கரூரை நோக்கி சென்ற கார் மோதியதில் பலியானார்.

