/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேர் கைது
/
போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேர் கைது
ADDED : ஜூன் 22, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி எஸ்.ஐ., சந்திரன் தலைமையிலான போலீசார், தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பத் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஈரோடு, மாணிக்கம்பாளையம், வக்கீல் தோட்டம் முனியப்பன் கோவில் வீதி கலையரசன், 21, சதாம் ஹூசைன், 23, ஆகியோர், போதை மாத்திரை விற்பனை செய்வதை அறிந்தனர்.
இருவரையும் கைது செய்து, 100 கிராம் போதை புகையிலை, ௧௦ மாத்திரை, 5 ஊசிகளை பறிமுதல் செய்தனர்.