ADDED : ஆக 24, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழக
பள்ளிக்கல்வித்துறை சார்பில் காமராஜர் விருது வழங்கப்பட்டு
வருகிறது. இந்த விருது மாணவர் சேர்க்கை அதிகரித்தல், இடைநிற்றலை
குறைத்தல், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக சிறப்பான
செயல்பாடு, விளையாட்டு போட்டி, தேர்ச்சி சதவீதம் போன்ற பல்வேறு
காரணிகளுக்காக வழங்கப்படும்.
விருதுக்கு தேர்வாகும் மேல்நிலை
பள்ளிக்கு ஒரு லட்சமும், உயர்நிலை பள்ளியாக இருந்தால், 75 ஆயிரம்,
நடுநிலை பள்ளிக்கு, 50 ஆயிரம், தொடக்க பள்ளிக்கு, 25 ஆயிரம் ரூபாய்
வழங்கப்படும். இதை பள்ளி உட்கட்டமைப்பு மற்றும் மாணவ--மாணவிகளின்
நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்தில்
அரச்சலுார் அரசு மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை கைகோளபாளையம்
உயர்நிலை பள்ளி, நடப்பாண்டு விருக்கு
தேர்வாகியுள்ளது.
