ADDED : ஜூன் 07, 2026 06:01 AM
ஈரோடு:தமிழகத்தில்
புதியதாக பொறுப்பேற்ற த.வெ.க., அரசு, வழிபாட்டு தலங்கள், பள்ளிகள்,
நெடுஞ்சாலைக்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 42 கடைகள் மூடப்பட்டதாக, டாஸ்மாக்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் ஈரோட்டில் வ.உ.சி.,
பூங்கா பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை, கனிராவுத்தர் குளம் பகுதி டாஸ்மாக்
கடையால், பெண்களுக்கு பெரும் இடையூறு இருப்பதாக, த.வெ.க.,
எம்.எல்.ஏ.க்கள், அமைச்சரிடம் புகார் போனது. இதை தொடர்ந்து இரு கடைகளும்
நேற்று முன்தினம் இரவு முதல் மூடப்பட்டதாக, டாஸ்மாக் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்
கடைகளின் எண்ணிக்கை, 44 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில்,
140 டாஸ்மாக் கடை செயல்படுவதாக டாஸ்மாக் நிர்வாகத்தினர்
தெரிவித்தனர்.
