/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராவல் மண் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்
/
கிராவல் மண் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஆக 09, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அருகே பிரம்மதேசம் அடுத்த புதுக்கரடியானுார் பகுதியில், சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்துவதாக, அத்தாணி ஆர்.ஐ., சசிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு துணை தாசில்தார் திருமூர்த்தி, ஆர்.ஐ., சசிக்குமார், வி.ஏ.ஓ., அருள்மணி ஆகியோர் ரோந்து சென்றனர்.
அப்போது, அதிகாரிகளை கண்ட டிப்பர், பொக்லைன் டிரைவர்கள் தப்பியோடினர். இதையடுத்து, இரு வாகனங்களையும் பறிமுதல் செய்து, அந்தியூர் தாலுாகா அலுவலகத்தில் நிறுத்தினர்.