ADDED : ஜூன் 24, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கருங்கல்பாளையம் சுப்பையன் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், 68; ஆயில்
மில் பேக்கிங் கான்ட்ராக்டர். இவர் வீட்டில் கடந்த வாரம் பூட்டை உடைத்து,
21 பவுன் நகை திருட்டு போனது. கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை
நடத்தினர்.
இந்நிலையில் செல்வராஜ் வீட்டின் பக்கத்து வீட்டில்
வசிக்கும் மாரியம்மாள், 24, மற்றொரு வீட்டில் வசிக்கும் அழகு சாதன
பொருட்கள் விற்பனை கடையில் வேலை பார்க்கும் பிரியா, 34, ஆகியோரை நேற்று
கைது செய்தனர். இவர்களுக்கு உதவியாக இருந்த நபர்கள் யார்? என்ற
கோணத்தில் விசாரணை நடக்கிறது. நகைகள் மீட்கப்பட்டதாக போலீசார்
எதுவும் சொல்லவில்லை.
