ADDED : ஜூன் 24, 2026 04:50 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:தாளவாடி
அருகேயுள்ள திகினாரை, ரங்கசாமி கோவில் தோட்ட பகுதியை சேர்ந்தவர்
நாகநாயக்கர், 65; விவசாயியான இவர் நேற்று காலை தோட்டத்தில் வேலை
செய்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு கடித்து விட்டது.
அருகில்
இருந்தவர்கள் மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ் நகர்
அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார்.
இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
