/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ்சில் பெண் பயணியிடம் திருடிய 2 பெண்கள் கைது
/
பஸ்சில் பெண் பயணியிடம் திருடிய 2 பெண்கள் கைது
ADDED : ஆக 24, 2025 12:54 AM
கோபி, கவுந்தப்பாடி அருகே பெரியபுலியூரை சேர்ந்தவர் ராஜலட்சுமி, 32; கவுந்தப்பாடியில் ஒரு வங்கியில் பணம் செலுத்த, 15 ஆயிரம் ரூபாயுடன், எல்லீஸ்பேட்டையில் இருந்து, கவுந்தப்பாடி நால்ரோட்டுக்கு நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு, அரசு பஸ்சில் பயணித்தார்.
பஸ்சில் இருந்து இறங்கியபோது, பர்சில் வைத்திருந்த பணம் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அதேசமயம் அவருடன் இறங்கிய இரு பெண்கள், சந்தேகப்படும் வகையில் ஓடினர்.
இருவரையும் அப்பகுதி மக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து, கவுந்தப்பாடி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் ராஜலட்சுமியின் பணத்தை களவாடியவர்கள் என தெரிந்தது. திருவண்ணாமலையை சேர்ந்த காவேரி, 38, சோலையம்மாள், 34, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். பணத்தையும்
பறிமுதல் செய்தனர்.

