/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒடிசாவில் இருந்து 10 கிலோ கஞ்சா கடத்தல் ஈரோட்டை சேர்ந்த 2 பெண்கள் கைது
/
ஒடிசாவில் இருந்து 10 கிலோ கஞ்சா கடத்தல் ஈரோட்டை சேர்ந்த 2 பெண்கள் கைது
ஒடிசாவில் இருந்து 10 கிலோ கஞ்சா கடத்தல் ஈரோட்டை சேர்ந்த 2 பெண்கள் கைது
ஒடிசாவில் இருந்து 10 கிலோ கஞ்சா கடத்தல் ஈரோட்டை சேர்ந்த 2 பெண்கள் கைது
ADDED : அக் 28, 2025 01:43 AM
ஈரோடு, ஒடிசாவில் இருந்து ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தி வந்த, ஈரோட்டை சேர்ந்த இரு பெண்களை, பஸ்சில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வடமாநிலத்தில் இருந்து ரயிலில் அதிகமாக கஞ்சா கடத்தி வருவதால், ரயில்வே போலீசார், ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த இரு பெண்கள், ஓடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக, சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இருவரின் மொபைல்போன் சிக்னலை வைத்து கண்காணித்தனர். இருவரும் சோலார் வழியாக ஈரோட்டுக்கு பஸ்சில் வருவதை அறிந்து, இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார், பஸ்சிலேயே இரு பெண்களையும் கைது செய்தனர். அவர்களிடம், 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு, 3 லட்சம் ரூபாய். விசாரணையில் ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் லோகநாதன் மனைவி சரஸ்வதி, 65; நந்தகுமார் மனைவி சுலோச்சனா, 69, என தெரிந்தது.இருவரும் கடந்த வாரம் ஒடிசா சென்று, அங்கு கஞ்சா வாங்கிவிட்டு, விஜயவாடாவில் இருந்து ரயிலில் சென்னை வந்தனர். அங்கிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி வந்து, அங்கிருந்து பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கொடுமுடி வரை வந்தனர். கொடுமுடியில் இறங்கி பஸ்சில் ஈரோடு வந்தபோது கைது செய்யப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

