/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறையில் இருவேறுவிபத்தில் 2 தொழிலாளி பலி
/
பெருந்துறையில் இருவேறுவிபத்தில் 2 தொழிலாளி பலி
ADDED : ஏப் 22, 2025 01:43 AM
---பெருந்துறை:அந்தியூரை அடுத்த குமாரயனுார், செண்பக தோட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 27; பெருந்துறை அடுத்த பல்லகவுண்டன்பாளையத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் லோடுமேனாக வேலை செய்தாதார். நேற்று முன்தினம் இரவு பல்சர் பைக்கில், தன்னுடன் வேலை செய்யும் வடமாநில தொழிலாளியுடன், பெருந்துறை சென்றார். அப்போது பைக் நிலை தடுமாறியதில் இருவரும் சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சீனிவாசன் வரும் வழியில் இறந்து விட்டது தெரிந்தது. வட மாநில தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார்.* பெருந்துறை அடுத்த செல்லப்பகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சென்னி, 64, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, காஞ்சிக்கோவில் அருகே கருங்கரடு வாய்க்கால் பாலம் அருகில் நடந்து சென்றபோது பைக் ஒன்று மோதியதில் இறந்தார்.