/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எடை கற்களை திருடிய 2 வாலிபர்கள் கைது
/
எடை கற்களை திருடிய 2 வாலிபர்கள் கைது
ADDED : ஜன 14, 2025 02:46 AM
ஈரோடு: ஈரோடு, பெரிய சேமூர், சீனன்காட்டை சேர்ந்தவர் பிரகாஷ், 31; துணி நெய்யும் இயந்திரம் அசையாமல் ஓட இரும்பு மற்றும் காஸ்டிங் கலந்த எடை கற்களை வைத்திருந்தார். அதே பகுதியில் உள்ள எஸ்.எஸ்.பி.நகரை சேர்ந்த குமார், 23; சூளை, முனியப்பன் -கோவில் வீதி புவனேஸ்வரன், 24, எடை கற்களை எடுத்து செல்ல முயன்றனர். பிரகாஷ் வருவதை பார்த்தவுடன் வைத்து விட்டு தப்-பியோட முயற்சித்தனர். இருவரையும் பிடித்து விசாரித்த
போது, கடந்த சில தினங்களாக, 18 காஸ்டிங் எடை கற்களை திருடியதை ஒப்பு கொண்டனர். இருவரையும் வீரப்பன்சத்திரம் போலீசில் ஒப்-படைத்தார். போலீசார் இருவரையும் கைது செய்தனர். இருவரும் திருடி சென்ற, 36
ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எடைக்கற்களை பறிமுதல் செய்தனர்.

