ADDED : அக் 25, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ணையில் தீ
20 கோழிகள் பலி
ஈரோடு, அக். 25-
ஈரோட்டை அடுத்த மலையம்பாளையம், பச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தன். கோழி பண்ணை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் அதிகாலை பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் நான்கு டூவீலர்கள், 20 கோழிகள் தீக்கிரையாகின. மர்ம நபர்கள் பண்ணைக்கு தீ வைத்திருக்கலாம் என்று, ஆனந்தன் அளித்த புகாரின்படி, மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.

