/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் 20 பயணிகள் படுகாயம்
/
ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் 20 பயணிகள் படுகாயம்
ADDED : ஜூன் 14, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: கோவையில் இருந்து காரைக்குடிக்கு ஒரு ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. கோவை மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ரமேஷ், 35, ஓட்டினார்.
பஸ்சில், ௨௩ பயணிகள் இருந்தனர். காங்கேயம் அருகே கோவை-திருச்சி சாலையில் கொடுவாய் என்.காஞ்சிபுரம் வழியாக நள்ளிரவில் வந்தது. அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. இதில், 20 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.