/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டப்பகலில் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
/
பட்டப்பகலில் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
ADDED : நவ 11, 2024 07:29 AM
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ., காலனி ஏழாவது வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 59; அதே பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார். நேற்று காலை மனைவியுடன் உறவினர் இல்ல விழாவுக்கு சென்றார். இரு மகள்களும் வெளியில் சென்று விட்டனர்.
மாலையில் பன்னீர்செல்வம், அவரது மனைவியும் வீடு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது இரு பீரோக்களும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த, 20.5 பவுன் நகை திருட்டு போனதை தெரிந்தது. புகாரின்படி சூரம்பட்டி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் போலீசார் சோதனை செய்த போது, கேட்பாரற்ற ஒரு மொபட் சிக்கியது. அதன் பதிவெண்ணை கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.