நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கீழ்பவானி பாசனங்களின், முதல் போக சாகுபடிக்காக, கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ஐ.ஆர்.,20 ரக விதை நெல், 20 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், விதை நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை முதல்போக சாகுபடிக்கு இதுவரை பிற ரக விதை நெல், 25 விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில், முதல் போக நன்செய் பாசனத்துக்கு, நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கிலோ, 39 ரூபாயில், ஐ.ஆர்.,20 ரக விதை நெல், 20 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்பெற சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

